என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு - II


பார்த்த முதல் நாளே
உன்னை
பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன்
காட்சிப் பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனையடித்தாய்
ஒரு கடலாய் வந்து எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய
உன் முகம்
உன் முகம்
என்றும் மறையாதே....

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே
காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே
கண்ணில்
காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை

உன் அலாதி அன்பினில்
நனைந்த பின்
நனைந்த பின்
நானும் மழையானேன்....


காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப் பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக்
காட்சிக்குள் நிற்பதுந்தன் முகமே

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்

உனையேதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டுமென்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்

சரியென்று சரியென்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்..... (காட்டிக்)

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்

தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிலவீடு கட்டிக்கொள்ள தோன்றும்

நீயும் நானுமங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிடத் தோன்றும்

கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்........ (பார்த்த)

1 Comments:

Blogger ஷைலஜா said...

வார்த்தைவரிகள் தேடி அலைந்தபோது
வலைதன்னில் கொடுத்தவரும் நீங்கதான்!

*******************************************8
பார்த்தமுதல்நாளாய் பாட்டு கேட்டமுதல் நாளாய் பிடித்துப்போனாலும் வரிகள் மனதில் பதியவில்லை இன்று உங்க வலை வந்து படித்துமனதில் பதிந்துவிட்டது நன்றி
ஷைலஜா

10:56 PM

 

Post a Comment

<< Home